சரிகமப சீனியர் சீசன் 5 கிராண்ட் லான்ச்!! சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?
சரிகமப சீனியர் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்நிகழ்ச்சியில் ஜூனியர் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த மே 11 ஆம் தேதியோடு நிறைவடைந்தது.
டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சரிகமப நிகழ்ச்சியில் அடுத்த நிகழ்ச்சி எப்போது ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்கவுள்ளது என்ற தகவல் வெளியானது.
கிராண்ட் லான்ச்
தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் லாஞ்ச் வரும் மே 24 ஆம் தேதி ஆரம்பிக்கவுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டது.
இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பாடகர் ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக், ஸ்வேதா மோகன் போன்றவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் லான்சிற்கு யார் சிறப்பு விருந்தினராக வருவார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், டி ராஜேந்தர் வருவார் என்று ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.