காசுக்காக தவித்த கமலின் முன்னாள் மனைவி.. கண்டுகொள்ளாமல் காதலருடன் ஊர் சுற்றும் மகள் ஸ்ருதி ஹாசன்

Kamal Haasan Shruti Haasan
By Kathick May 12, 2022 10:42 AM GMT
Report

நடிகர் கமல் ஹாசன் கடந்த 1978ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். 10 ஆண்டுகள் நீடித்த இந்த திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.

இதன்பின் கடந்த 1998ஆம் ஆண்டு சரிகா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரு பிள்ளைகள் உள்ளனர். இவ்விருவரும் தற்போது திரையுலகில் நடிகைகளாக ஜொலித்து வருகிறார்கள்.

ஏழு ஆண்டுகளாக நீடித்த இவர்களின் திருமண வாழ்க்கை 2004ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. இதன்பின், தற்போது சரிகா மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில், சரிகா குறித்து அதிச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது தன்னுடைய சொந்த செலவுக்கு கூட காசு இல்லாமல் தவித்து வந்துள்ளாராம். இதனால், தனது பண தேவையாக சீரியலில் நடிக்க போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படி வாழ்க்கையில் தவித்து வரும் தனது அம்மாவை, பக்கத்தி இருந்து கவனித்துக்கொள்ளாமல், காதலருடன் ஊர் சுற்றி வருகிறார் ஸ்ருதி ஹாசன்.