15 வயதில் முதல் திருமணம்! 65 வயதில் இரண்டாம் மனைவியை விவாகரத்து செய்த சரிதாவின் கணவர்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 70களில் இருந்து நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சரிதா. தப்பு தாளங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். இதையடுத்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என சுமார் 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல விருதுகலை வாங்கினார்.
1975ல் அவரின் 15 வயதில் வெங்கட சுப்பையா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடுகளால் ஒரே ஆண்டியில் இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர். இதையடுத்து 1988ல் தெலுங்கு நடிகர் முகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட சரிதா பின் அவரையும் 2011ல் விவாகரத்து பெற்றார். இந்நிலையில், மெதில் தேவிகா என்ற கிளாசிக் நடன கலைஞரை 2013ல் திருமணம் செய்து கொண்டார் நடிகர் முகேஷ். தற்போது இருவருக்கும் ஒரு மகன் இருக்கும் நிலையில் விவாரத்து பெற்று பிரிந்துள்ளனர்.
தேவிகாவிற்கு முகேஷிற்கும் சுமார் 20 வயது வித்தியாசம் இருந்தும் திருமணம் செய்து கொண்டனர். இதுபற்றி மெதில் தேவிகா கூறுகையில், முகேஷ் உடன் இணைந்து வாழ்ந்த நான் இத்தனை வருடங்களாக அவரை புரிந்துகொள்ள முடியவில்லை எத்தனை வருடங்கள் ஆனாலும் அவரை புரிந்து கொள்ள முடியாது எனவும் மேலும் அவர்மேல் கோபம் ஏதும் இல்லை எனவும் விவாகரத்து என்பது என்னுடைய தனிப்பட்ட நான் எடுத்த முடிவு எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் விவாகரத்துப் பெற்ற பிறகு மிகப்பெரிய கடுமையான சூழ்நிலை சந்திக்க போகிறேன் எனவும் கூறியுள்ளார். மேலும் விவாகரத்து விஷயத்தில் அவரைப்பற்றி வன்கொடுமை மற்றும் அரசியல் சம்பந்தமாக எதையும் கூறவில்லை என்று கூறியுள்ளார்.
தற்போது கேரள மாநிலத்தில் நடிகர் முகேஷ் எம் எல் ஏ பதவியில் இருந்து வருகிறார்.