13 வயதில் 43 வயது இயக்குநருடன் திருமணம்..இறந்துபோன குழந்தை!! பிரபல கோரியோகிராஃபரின் கண்ணீர் பக்கம்..
சரோஜ் கான்
பாலிவுட்டில் வெளியாகி இன்றும் கொண்டாடப்படும் பாடலாக இருப்பது தான் எக் தோ தின். இப்பாடல் நடனம் ரசிகர்களிடையே மிகப்பெரியளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படியான 2000 பாடல்களுக்கு நடன அமைப்பாளராக திகழ்ந்தவர் தான் சரோஜ் கான். முன்னணி கோரியோகிராஃபரான சரோஜ் கான், 13 வயதில் 43 வயதான இயக்குநருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டு தனிப்பட்ட வாழ்க்கையில் பல துயரங்களை சந்தித்துள்ளார்.

கடந்த 1948ல் மும்பையில் பிறந்த சரோஜ் கான், சிறு வயதில் சினிமாவில் நுழைந்துள்ளார். 13 வயதாக இருக்கும்போது 43 வயதான இயக்குநர் பி சோஹன்லால் என்பவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார். தன்னைவிட 30 வயது மூத்தவருடனான திருமணம் அவருக்கு விருப்பமில்லாமலே நடந்தது.
இறந்துபோன குழந்தை
14 வயதில் கர்ப்பமானபோது, தன் கணவர் ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார் என்ற உண்மையை சரோஜ் கான் அறிந்துகொண்டார். வேறு வழியில்லாமல் சூழ்நிலை கைதியாக சில ஆண்டுகள் அவருடனே வலிகளை தாங்கி கொண்டு வாழ்ந்தார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், அப்போது எனக்கு திருமணம் என்றால் என்ன என்பதே தெரியாத வயது. ஒருநாள் அவர் கருப்பு கயிறு ஒன்றை என் கழுத்தில் அணிவித்தார். உடனே திருமணம் முடிந்துவிட்டது என்றார்கள். குழந்தை பெற்று சில நாட்களில் நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று கூறியிருந்தார் சரோஜ் கான்.

அதன்பின் குழந்தையை வளர்த்து வந்தவர் 1975ல் சர்தார் ரோஷன் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய குழந்தையை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கண்டீஷன் போட்டு இருவரும் இருவரும் இணைந்து வாழ்ந்தனர். இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்க, சரோஜ் கானுக்கு 39 வயதாக இருந்தபோது குழந்தை மருத்துவ காரணங்களால் உயிரிழந்தது.