நானா சான்ஸ் கேட்டேன்..நான் எவ்வளவு பெரிய ஆள்!! வடிவேலுவால் கோபத்தின் உச்சிக்கு சென்ற சரோஜா தேவி.
சரோஜா தேவி
தமிழ் திரையுலகில் 60 முதல் 70 வரையான காலகட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் என அப்போது முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் அனைவருடனும் நடித்தவர்.
7 வயதான சரோஜா தேவி உடல்நல குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார். கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த சரோஜா தேவி பற்றி பல விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
வடிவேலு
ஆதவன் படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த ஒரு சம்பவம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படத்தில் வடிவேலு ஒரு காட்சியில், மேலே போ பெளடரை நிறைய போட்டுக்கிட்டு ஒரு அம்மா இருக்கும் என்ற வசனத்தை சரோஜா தேவியை குறிப்பது போன்று பேசியிருப்பார். அந்த வசனத்தை ரமேஷ் கண்ணாவோ, கே எஸ் ரவிக்குமாரோ வைக்கவில்லையாம்.
வடிவேலுவாகவே அந்த வசனத்தை சொல்லியுள்ளார். இதனால் சரோஜா தேவி கோபம் உச்சக்கட்டமாக வந்திருக்கிறது. உடனே ரமேஷ் கண்ணாவிடம், நான் உங்களிடம் நடிக்க சான்ஸ் கேட்டேனா? கூப்பிட்டு வைத்து இப்படி சொல்லலாமா?.
வடிவேலு அந்த டயலாக்கை சொல்வது தப்புதானே..நான் என்ன காமெடி ஆர்ட்டிஸ்ட்டா? நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? என்று கேட்டுள்ளார். பின் எப்படியோ அவரை சமாதானம் செய்ததாக பேட்டியொன்றில் நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.