கோடான கோடி பாட்டுக்கு ஆட்டம் போட்ட நடிகை நிக்கிதாவா இது!! இப்போது எப்படி இருக்காருன்னு பாருங்க..
தெலுங்கு சினிமாவில் ஹாய் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை நிக்கிதா துக்ரல். இப்படத்தினை தொடர்ந்து தமிழில் குறும்பு படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
பின் வெற்றிவேல் சக்திவேல், சரோஜா, முரண், அலெக்ஸ் பாண்டியன், பாயும் புலி, பொங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். சரோஜா படத்தில் கோடான கோடி பாடலில் அவர் ஆட்டம் போட்டது ரசிகர்களை இன்றுவரை ஈர்த்து வருகிறது.
கதாநாயகியாக நடித்து வந்த நிக்கிதா, 2016ல் ககந்தீப் சிங் மாகோ என்பவரை திருமணம் செய்து ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். அதன்பின் சிறப்பு தோற்றங்களில் நடித்து வரும் நிக்கிதா, 42 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் அழகில் மின்னியிருக்கிறார்.
அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. தற்போது தன் கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்த க்யூட் புகைப்பட தொகுப்பு வீடியோவையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை நிக்கிதா துக்ரல்.