67 வயது நடிகருக்கு அப்பாவாக நடித்த சத்தியராஜ்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல

Sathyaraj Chiranjeevi Nandamuri Balakrishna
By Dhiviyarajan Jan 27, 2023 11:30 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

சினிமாவை பொறுத்து வரை ஹீரோயின்களுக்கு பட வாய்ப்பு சரியாக அமையவில்லை என்றால் கிடைக்கிற அக்கா, தங்கை அல்லது ஏதாவது சிறிய ரோல்களில் நடித்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.

இருப்பினும் யாராலும் ஜீரணிக்க முடியாத அளவிற்கு தெலுங்கு சினிமாவில் சில விஷயங்கள் நடைபெற்றுள்ளது. அது என்னவென்றால், பிரபல நடிகர் சத்யராஜ் தெலுங்கு ஸ்டார் சிரஞ்சீவிக்கு அப்பாவாக 'வால்டர் வீரய்யா' படத்தில் நடித்தது தான்.

இருவருமே ஒரே வயது உடையவர்கள் தான், இதனால் இது குறித்து சமூக வலைத்தளத்தில் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

67 வயது நடிகருக்கு அப்பாவாக நடித்த சத்தியராஜ்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல | Sathiyaraj Acted Father Role For 67 Age Actor

மோசமான விமர்சனம்

இது மட்டுமின்றி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ம ரெட்டி படத்திலும் இதே நிலைமை தான்.

இப்படத்தில் பாலகிருஷ்ணா விட 31 வயது குறைந்த ஹனி ரோஸ், அவருக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதனால் பட குழுவை பலரும் மோசமாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.