திருமணமாகாமல் குழந்தை பெறும் சர்ச்சை பேச்சு!! விளக்கமளித்த திவ்யா சத்யராஜ்..
திவ்யா சத்யராஜ்
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், திருமணம் செய்து கொண்டுதான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ல்லாம் நான் ஏற்க மறுக்கிறேன்.

திருமணம் செய்து கொள்ளலாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம், அப்படி யாராவது குழந்தை பெற்றுக்கொண்டால் அதை நான் மதிக்கமாட்டேன். என்னைப் பொறுத்தவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசிக்காமல் இருவரும் தங்களது வீட்டில் வசித்துக்கொண்டே இணைந்து வாழ முடியும் என்று கூறிருந்தார் திவ்யா சத்யராஜ்.
இதனையடுத்து பலரும் அவரை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் திவ்யா சத்யராஜ்.

விளக்கம்
யூடியூப் சேனலுக்கு நான் அளித்த பேட்டியில், என் கருத்துகலை சந்தோஷமாக தெரிவித்தேன். ஆனால் சிலநேரம் தம்ப்நெயிலில் வைக்கப்படும் கேப்ஷன்கள் நான் சொல்ல வந்த கருத்தின் அர்த்தத்தை மாற்றிவிடுகிறது. சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
நான் ஜட்ஜ்மெண்ட் ஆள் கிடையாது. எனக்கு மதம், திருமணம், ஜாதகம் மீது நம்பிக்கை கிடையாது. யாராவது சிங்கிளாக இருக்க விரும்பி அதே சமயம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால் அது அவர்களின் விருப்பமாகும். அவர்கள் உறவினர்கள், சமூகத்தால் விமர்சிகப்படாமல் தங்களுக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை வாழ வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமையை நம்பும் குடும்பம் எங்களுடையது. நம் வித்தியாசங்களை ஏற்றுக்கொண்டு, ஒருவரைவொருவர் கொண்டாடி, அன்பை பரப்புவோம் என்று தெரிவித்துள்ளார் திவ்யா.