மிகவும் வேதனையான கட்டத்தை கடந்துள்ளேன்!! சத்யராஜ் மகள் திவ்யாவின் பதிவு,..
நடிகர் சத்யராஜ் மனைவி
தென்னிந்திய சினிமாவில் தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் நடிகர் சத்யராஜ், தனது மனைவி கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதாக கூறி பேட்டிக் கொடுத்து வந்தார்.
அவருக்கு முன் தன் அம்மா இப்படியான சூழலில் இருப்பதாக சத்யராஜ் மகள் திவ்யா தெரிவித்திருந்தார். தற்போது ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களுக்கு உதவி செய்து வருகிறார் திவ்யா சத்யராஜ்.
மகள் திவ்யாவின் பதிவு
இந்நிலையில் அம்மா குறித்து மீண்டும் உருக்கமான ஒரு பதிவினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அம்மாவின் உடல்நிலை காரணமாக வாழ்க்கை சவாலாக மாறியது.
வீட்டில் ஐசியூவை வைத்து கோமா நோயாளியை கவனிப்பது கடினமானது, ஆனால் என் பெற்றோரை பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வேன். நானும் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் வேதனையான கட்டத்தை கடந்து வருகிறேன். ஊட்டச்சத்து நிபுணராக எனது வெற்றிகரமான வாழ்க்கை என்னை முன்னேற வைத்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள சமூகத்தினருக்கு சத்தான உணவு வழங்க எனது அரசு சாரா நிறுவனத்தை தொடங்குவது எனக்கு புதிய நம்பிக்கையை தந்துது, நான் குணமடைய உதவியது. விரைவில் நல்ல செய்தியை உங்களுடன் பகிர்வேன் என்று சத்யராஜ் மகள் திவ்யா தெரிவித்துள்ளார்.