இருங்க பாய் வசனத்தை வைத்து அஜித் பாடல் ரெடி செய்த அனிருத், என்ன பாட்டு இதெல்லாம்

Ajith Kumar Anirudh Ravichander VidaaMuyarchi
By Tony 3 months ago
Report

SAWADEEKA பர்ஸ்ட் சிங்கிள்

மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் தான் விடா முயற்சி. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஆன SAWADEEKA தற்போது வெளியாகியுள்ளது.

SAWADEEKA என்றால் தாய் மொழியில் ஹலோ என்று பொருளாம், இந்த பாடல் தற்போது இணையத்தில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்துள்ளது, அதோடு நல்ல இன்ஸ்டா ரீல்ஸுக்கு இந்த பாடல் உதவும் என்று கூறப்படுகின்றது.

ஏனெனில் தற்போது இணையத்தில் செம பேமஸ் ஆன இருங்க பாய் வசனத்தை அனிருத் இந்த பாடலில் பயன்படுத்தியது இளைஞர்கள் மத்தியில் செம வைரல் ஆகி வருகின்றது.

ஆனால், பல அஜித் ரசிகர்கள் என்னங்க இது பாட்டு, ட்ரெண்ட், வைரல் , ரீல்ஸ் வெறிக்காக எதையாவது போட்டு வைத்து விடுகிறார்கள் என்று கவலைப்பட்டும் வருகின்றனர்.

நீங்களும் இந்த பாட்லை கேட்க இதோ க்ளிக் செய்க