காசு வாங்கி விளம்பரம் செய்த டிக்டாக் அமலா ஷாஜி!! நம்பி நடுத்தெருவுக்கு வந்த ஃபாலோவர் ..

Gossip Today Tamil Actress
By Edward Jan 11, 2024 07:30 AM GMT
Report

மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாக தற்போது சமுகவலைத்தளம் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. அப்படி டிக்டாக் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானவர் அமலா ஷாஜி. இன்ஸ்டாகிராமில் மட்டும் 4 மில்லியன் ஃபாலோர்ஸ்களை வைத்திருக்கும் அமலா ஷாஜி சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி செய்திருக்கும் விசயம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

பணத்தை ஆட்டையை போட நடத்தும் தில்லாலங்கடி வேலைகளை செய்து மக்களை ஏமாற்றும் கதையை மையமாக வைத்து தான் சதுரங்க வேட்டை படம் வெளியாகியது. அப்படத்தினை போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இன்ஸ்டாவில் சில பிராடெக்ட்-களை விளம்பரம் செய்து காசு சம்பாதித்து வருகிறார் அமலா ஷாஜி.

காசு வாங்கி விளம்பரம் செய்த டிக்டாக் அமலா ஷாஜி!! நம்பி நடுத்தெருவுக்கு வந்த ஃபாலோவர் .. | Scam Amala Shaji Promoted Cheating Trading Company

சமீபத்தில், ஆன்லைன் மணி கேம் மூலம் இரு மடங்கு வருமானம் பெறலாம் என்று அனனியா பாரக்ஸ் ஐடி மூலம் தொடர்பு கொள்ளுங்கள் என்று விளம்பரத்தை செய்திருக்கிறார். இதை அவரை பின்பற்றி வரும் ஃபாலோவர் ஒருவர், ஆயிரம் முதலீடு செய்ததில் உடனே அவருக்கு 50 நிமிடத்தில் அந்த பணம் 15 ஆயிரம் ரூபாயாக கிரிப்டோ கரன்சி டிரேட்டிங்கில் மாறியுள்ளது.

இதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பி 9000 ரூபாயை மறுபடியும் கேட்டிருக்கிறது அனன்யா போரக்ஸ். பின் 1.30 லட்சம் ரூபாய் மதிப்பு கூடிவிட்டது, 19 ஆயிரம் சர்வீஸ் சார்ஜ் கொடுக்க வேண்டும் என்று கூற, அவ்வளவு இல்லை என்பதால் 16 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர்.

லியோவுக்கு நோ அயலானுக்கு Yes-ஆ!! சிவகார்த்திகேயனால் கடுப்பாகும் விஜய் ரசிகர்கள்..

லியோவுக்கு நோ அயலானுக்கு Yes-ஆ!! சிவகார்த்திகேயனால் கடுப்பாகும் விஜய் ரசிகர்கள்..

அதையும் அவர் அனுப்பிவிட்ட உடன் 30 நாட்களில் உங்கள் பணம் வந்துவிடும் என்று கூறிவிட்டு அந்த அக்கவுண்டை கிளோஸ் பண்ணிவிட்டுள்ளனர். இந்த சம்பவத்தை பற்றி அந்த நபர் புகாரளித்து வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார். இந்த சம்பவத்தில் தவறாக விளம்பரம் செய்த அமலா ஷாஜியை பலர் கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.