லியோவுக்கு நோ அயலானுக்கு Yes-ஆ!! சிவகார்த்திகேயனால் கடுப்பாகும் விஜய் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். பல பிரச்சனைகளுக்கு பின் பல ஆண்டுகள் கிடப்பில் இருந்த அயலான் படம் வரும்12 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வரும் சிவகார்த்திகேயனின் அயலான் படக்குழுவுக்கு அரசு ஒரு முக்கிய அனுமதியை அளித்திருக்கிறார்.

அதிக வியாபாரம் உடைய முன்னணி நடிகர்கள் படங்கள் ரிலீஸ் ஆகினால் அவர்களுக்கு அதிகாலை காட்சிகள் கொடுப்பது வழக்கம். ஆனால் தமிழக அரசு, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திற்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதியை கொடுக்கவில்லை.
ஆனால் சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி அளித்திருக்கிறது. இதனை பிரபல விமர்சகர்கள் அந்தணன், பிஸ்மி விமர்சித்தும் அரசை கண்டித்தும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.