அஜித் நெஞ்சில் குத்தியுள்ள சாமி டாட்டூ இதுதான்..பின்னணி என்ன நடந்தது..

Ajith Kumar Kerala Tattoo Tamil Actors
By Edward Oct 25, 2025 07:15 PM GMT
Report

அஜித் குமார்

சினிமாவில் எந்தவொரு பின்புலனும் இல்லாமல் தன்னுடைய உழைப்பால் உயர்ந்து தற்போது டாப் நடிகராகவும் கார் ரேஸ் வீரராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித் குமார்.

விடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்திற்கு பின் ஒருசில இயக்குநர்களுடன் இணையவுள்ள அஜித் குமார், கார் ரேஸில் ஈடுபட்டும் வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய குடும்பத்தினருன் நேரத்தை செலவிட்டும் வருகிறார்.

சமீபத்தில் அஜித், தன்னுடைய மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் உடன், கேரள மாநிலம் பாலக்காட்டில் இருக்கும் தன்னுடைய குலத்தெய்வமான ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

அஜித் நெஞ்சில் குத்தியுள்ள சாமி டாட்டூ இதுதான்..பின்னணி என்ன நடந்தது.. | Secret Behind Actor Ajith Kumar New Tattoo

சாமி டாட்டூ

அஜித் பாலக்காட்டை சேர்ந்தவராக இருப்பதால் அவரது குலதெய்வம் ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மன் என கருதப்படுகிறது. அப்போது இதுவரை நெஞ்சில் குத்திக்கொண்டுள்ள சாமியின் டாட்டூவை தற்போது காட்டியிருக்கிறார்.

நெஞ்சில் என்ன சாமி என்று பலரும் அறிந்துக்கொள்ள ஆர்வம் காட்டி வந்தனர். அதன்படி அவர் தன்னுடைய குல தெய்வமான ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மனின் உருவத்தை தான் தன் நெஞ்சில் பச்சைக்குத்திக் கொண்டிருக்கிறாராம்.

GalleryGalleryGalleryGallery