திருமணம் செய்தது இதுக்குத்தான்? உண்மையை உடைத்து சர்ச்சையை ஏற்படுத்தி ரஜினிபட நடிகை..

marriage rajini radhikaapte
By Edward Oct 03, 2021 05:55 PM GMT
Report

சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் திருமணம் செய்தால் தன்னுடைய மார்க்கெட்டை இழந்துவிடுவோம் என்ற பயத்தில் வயதாகினாலும் அதை தவிர்த்து வருகிறார்கள். ஆனால் ஒரிசிலர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க அவர்களின் விருப்பத்துடன் படங்களிலும் நடிப்பார்கள்.

அந்தவரிசையில் இருப்பவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. சர்ச்சை படங்களை மிகவும் போல்ட்டாக நடித்து வரும், ராதிகா சமீபத்தில் திருமணம் செய்து இந்தியா இங்கிலாந்து என சுற்றியும் வருகிறார். தற்போது புதிதாக ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராதிகா ஆப்தே, “இங்கிலாந்தை சேர்ந்த பெனடிக் டைலர் எனும் இசை கலைஞரை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் திருமணம் செய்து கொண்டேன்.

எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லாமல் எதற்காக திருமணம் செய்தீர்கள் என்று நீங்கள் என்னை கேட்கலாம். வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால் மிக எளிதாக விசா கிடைத்துவிடும் என்பதால், விசா வாங்குவதற்காகவே நான் திருமணம் செய்தேன்.

எப்போது என் கணவரை பார்க்க வேண்டிய நேரம் வருகிறதோ அப்போது மட்டும் அவரை நேரில் சென்று சந்தித்து வருகிறேன் என்று கூறியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.