நாம் தமிழர் கட்சி சீமானுக்கு பெண் குழந்தை!! கொண்டாடும் தொண்டர்கள்...
தமிழக அரசியலில் தீவிரமான பேச்சு, சர்ச்சையான கருத்துகள், கடுமையான அரசியல் விமர்சனங்கள் என பல விஷயங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் தான் நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான்.
சீமான் - கயல்விழி
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவாக அதிகம் வெளிப்படுத்தாமல் இருக்கும் சீமானுக்கு தற்போது பலரது பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

சீமான் - கயல்விழி தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன் இருப்பது அனைவருக்கும் தெரியும். தற்போது அவர்களது குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்துள்ள செய்தி பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
சில நாட்களுக்கு முன் சீமானுக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளதை அவரது தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். அரசியல் பரபரப்புகளுக்கு இடையில் சீமான் வீட்டில் ஒலித்திருக்கும் குழந்தை சிரிப்பு சீமான் குடும்பத்திற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.