இந்த வயசுல ஐஸ்வர்யா ராய் கேக்குதா!! சரத்குமாரை கலாய்த்த சீமான்..
Aishwarya Rai
R. Sarathkumar
Seeman
Ponniyin Selvan 2
By Edward
முன்னணி நடிகராக திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோல், அரசியல் என்று பிஸியாக இருந்து வருபவர் நடிகர் சரத்குமார், பரமசிவம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சரத்குமாரை சீமான் கலாய்த்து பேசிய ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.
கலாய்த்த சீமான்
நிகழ்ச்சியில் பேசிய சீமான், சரத்குமாரை நான் அண்ணன் என்று தான் அழைப்பேன், நாங்கள் ரொம்பவே நெருக்கம், பொன்னியின் செல்வன் பட சமயத்தில் விமானநிலையத்தில் அவரை சந்தித்தப்போது நான் அவரிடம், உனக்கு இந்த வயசுல ஐஸ்வர்யா ராய் ஜோடி கேக்குதா என்று கேட்டேன்.
அதற்கு அவரோ, உனக்கு பொறாமைடா என்று கூறினார். உடலை நல்லபடியாக வைத்துக்கொண்டால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு சரத்குமார் ஒரு உதாரணம் என்று சீமான் பேசியிருக்கிறார்.