திருமணமான நடிகையின் உடலை சீண்டி கடுமையான டார்ச்சர் கொடுத்த சீனு ராமசாமி!! நடிகை கொடுத்த பகிர் வாக்குமூலம்..
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் சீனு ராமசாமி. கடைசியாக இவர் இயக்கத்தில் மாமனிதன் என்ற படம் வெளிவந்தது. வசூல் ரீதியாக சரிவை சந்தித்தாலும் விமர்சனம் ரீதியாக இப்படம் பல பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில் சீனு ராமசாமி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார் பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி. அதில் அவர் கூறுகையில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான இடம் பொருள் ஏவல் படத்தில் நடிப்பதற்காக சென்று இருந்தார் பிரபல நடிகை மனிஷா யாதவ்.
இந்த படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்தது. அந்த சமயத்தில் சீனு ராமசாமி அந்த நடிகைக்கு கடுமையான டார்சர் கொடுத்து இருக்கிறார். இந்த விஷயத்தால் மனிஷா யாதவ்-க்கு ஒரு வாரத்திற்கு மேல் படத்தில் நடிக்க முடியவில்லை. அதனால் அங்கு இருந்து கிளம்பி வந்துவிட்டார்.
அதன் பின் எனக்கு போன் செய்து சீனு ராமசாமி எந்த மாதிரியான பாலியல் தொல்லை கொடுத்தார் என்று என்னிடம் கூறினார். அந்த வாக்குமூலம் என்னிடம் இருக்கிறது.
இயக்குநர் சீனு ராமசாமியின் இன்னொரு முகம் என்பது இது தான். பல இயக்குனர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று பிஸ்மி கூறியுள்ளார்.
நடிகை மனிஷா யாதவ் Warnid என்பவரை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இடம் பொருள் ஏவல் கதாநாயகி மாற்றம் நடந்தது ஏன்? pic.twitter.com/5N2vgVlPz0
— Valaipechu J Bismi (@jbismi_offl) November 21, 2023