3 வருஷத்துக்கு முன் தாங்கமுடியாத வலி!! கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்த செல்வராகவன்..
செல்வராகவன்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வரும் செல்வராகவன், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் அவ்வப்போது சில பதிவுகளை பகிர்ந்து, மனதில் தோன்றும் கருத்துக்களையும் தத்துவங்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்ட வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அதில், நான் இதை ரொம்ப நாளாக உங்களிடத்தில் சொல்லலாம் என்று இருந்தேன், இப்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இது கொஞ்சம் சென்சிட்டிவானதாக இருக்கலாம் அல்லது ரொம்பவும் சென்சிட்டிவானதாகவும் இருக்கலாம். இது உங்களில் பலருக்கும் நடந்திருக்கலாம்.
3 வருஷத்துக்கு முன்
ஒரு 3 ஆண்டுகளுக்கு முன் என்னுடைய வாழ்க்கையில் பெரும் துயரம் ஒன்று நடந்தது. இந்த துயரத்தை என்னால் தாங்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் நான் அழவில்லை, ஆனால் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்துக்கொண்டே இருக்கிறது.
மனதுக்குள் இது கடவுள் கொடுத்ததுதான் என்று நான் நினைத்துக்கொண்டாலும், கடவுளே எனக்கு ஏன் இப்படி சோதனைகளை கொடுக்கிறாய் என்றெல்லாம் நான் கேட்டிருக்கிறேன்.

ஆனால் இந்த சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டுக்குப்பின் எனக்கு மற்றொரு சம்பவம் நடைபெறும்போது, இந்த துயரத்தை தாங்கும் மனவலிமையை எனக்கு ஏற்படுத்தத்தான் கடவுள் எனக்கு அப்படியொரு துயரத்தை கொடுத்து என்னை தயார்ப்படுத்தியுள்ளார் என்று நான் நினைக்கிறேன்.
உங்களுக்கும் இதுபோல் ஏதாவது துயரம் ஏற்படுகிறது என்றால் உங்களை வலிமையாக்கத்தான் கடவுள் இவ்வாறு செய்கிறார் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் செல்வராகவன்.