பொண்டாட்டி திட்டுறா, என்னால முடியல... புலம்பும் பிரபல இயக்குனர்
Selvaraghavan
By Yathrika
செல்வராகவன்
தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுபவர் செல்வராகவன்.
காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதன்பிறகு ஏகப்பட்ட வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து பின் சில காரணங்களால் விவாகரத்து பெற்றார்.
கடந்த 2011ம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு 3 குழந்தைகள்.
இந்த நிலையில் செல்வராகவன் தனது இன்ஸ்டாவில் நீ இருந்தும் உன் கூட இருக்க முடியல, நீ இல்லாமலும் என்னால இருக்க முடியல, நான் என்ன பண்றது என்று எனக்கு தெரியல, ஏன்னா நீ என்னை திட்டிக்கிட்டே இருக்க, நிறுத்து என செல்லமாக மனைவியுடன் சண்டை போட்டு இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.