செல்வராகவனை வைத்து பெரிய சம்பவம் செய்யப்போகும் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் சாணி காயிதம் டிரைலர்
தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கில் வசூல் பெறுவதையே தற்போதைய படங்கள் உருவாகி வருகிறது என்ற விமர்சனம் எழுந்து வருகிறது. ஆனால் நமக்கு படத்தின் கதை தான் முக்கியம் என்று ஒருசில இயக்குனர்கள் நல்ல தரமான படத்தினை கொடுத்து வருகிறார்கள்.
அப்படி ராக்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து சாணி காயிதம் என்ற படத்தினை எடுத்துள்ளார் அருண் மாதேஸ்வரன். இயக்குனர் செல்வராகவன், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தினை அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டீசன் மிரட்டியதை போன்று டிரைலரும் வெளியாகி மிரட்ட வைத்துள்ளது. கொலை சம்பந்தமாக பேசும் செல்வராகவனும் கீர்த்தி சுரேஷிற்கும் இப்படம் மிகப்பெரிய அளவில் பெயரை வாங்கி கொடுக்கும் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து தன் மார்க்கெட்டினை இழந்து இருக்கும் சூழலில் இப்படம் மிகப்பெரியளவில் கீர்த்தி சுரேஷின் கேரியரை மாற்றும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.