உங்களால முடியாது..யாருக்கும் அப்படி சொல்ல அருகதை இல்ல!! இயக்குநர் செல்வராகவன் அட்வைஸ்..
செல்வராகவன்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து தற்போது நடிகராகவும் திகழ்ந்து வருபவர் தான் செல்வராகவன். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன், ஏதாவது ஒரு பதிவினை பகிர்ந்து கருத்து கூறி வருவார். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ பதிவினை பகிர்ந்துள்ளார்.

அதில், இந்த உலகத்தில் உங்களை பத்தி எல்லாரும் சொல்லுற ஒப்பினியன் என்னென்ன உங்களுக்கு டேலண்ட் பத்தாது, உங்களால இதை பண்ண முடியாது, உங்களால இந்த உயரத்துக்கு பண்ண முடியாது, உங்களால என்னதான் கஷ்டப்பட்டாலும் இதை பண்ண முடியவே முடியாதுன்னு சொல்லுவாங்க.
ஆபிஸ்க்கு போனாலும் அதைத்தான், வீட்டுக்கு போனாலும் அதைத்தான் சொல்லுவாங்க. இந்த உலகத்துல சுத்திசுத்தி எங்க போனாலும் உங்களைப் பத்தி எல்லோரும் சொல்லுற ஒப்பினியன் ’உங்களால முடியாது’.

அருகதை இல்ல
இவங்க யாருக்கும் ஒப்பினியன் சொல்லுற அளவுக்கு அருகதை இல்லை. அவங்ககிட்டயே 10 ஆயிரம் குறைகள் வச்சிக்கிட்டு உங்கள பத்தி ஒப்பினியன் சொல்றதுக்கு எப்படி முடியும்? ஆனால் நம்ம பண்ணுற மிஸ்டேக் என்னன்னா, அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க, இவங்களே சொல்லிட்டாங்களே என்று அதையே நெனச்சிட்டு ஒரு நாளில் முக்கா வாசி நேரத்தை போக்கிவிடுகிறோம். அப்புறம் எங்கிருந்து உங்கள் லட்சியத்தை அடைய முடியும். இன்னும் பண்ணமுடியாது.
மனசு என்கிறது ரொம்ப தூய்மையான பிளேஸ், அங்க ரொம்ப நல்ல எண்ணங்களையும் நம் லட்சியங்களையும் பற்றி மட்டுமே யோசிக்கிட்டு இருந்தீங்கன்னா ரொம்ப சீக்கிரமா உங்களுடைய லட்சியத்தை அடையலாம். ஆனால் நீங்க அடுத்தவங்க சொல்றதை எல்லாம் யோசிச்சிட்டு இருந்தீங்கன்னா இருக்க வேண்டிய இடத்திலேயே இருக்க வேண்டியதுதான் என்று செல்வராகவன் அந்த வீடியோவில் கருத்துக்களை வாரி வழங்கியிருக்கிறார்.