23 வருஷமா அதைபற்றி தான் யோசித்திருக்கேன்!! இயக்குனர் செல்வராகவன் போட்ட டிவிட்

Selvaraghavan
By Edward Mar 01, 2023 06:26 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தன் தம்பி தனுஷை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி முன்னணி நடிகராக்கிய பெருமையும் செல்வராகவனுக்கு தான் சேரும்.

அப்படி அவர் இயக்கத்தில் பல படங்களில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பெற்றிருக்கிறார் தனுஷ். செல்வராகவனும் இயக்கத்தை தாண்டி தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் நடிப்பில் சமீபத்தில் பகாசுரன் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. செல்வராகவன் டிவிட்டரில் ஆக்டிவாக இருந்து ஏதாவது ஒரு கருத்தினை கூறுவதுண்டு.

அப்படி, "அனுபவத்தில் சொல்கிறேன், நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது, 23 வருடங்களாக வேலையைத்தவிர எதையும் நான் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாக உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன்" என்று ஆதங்கமாய் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார் செல்வராகவன்.

இதற்கு நெட்டிசன்கள் நான் இருக்கிறேன் என்று பலவிதமான கருத்துக்களை கூறியும் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.