வாழ்க்கையில் பட்ட அத்தனை கஷ்டம்! இயக்குனர் செல்வராகவன் கொடுத்த உண்மை சம்பவம் இதுதானா?

dhanush selvaraghavan tamildirector 7grainbocolony
By Edward Apr 16, 2022 04:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கஸ்தூரி ராஜா அவர்களின் மகன்களாக மிகப்பெரிய இடத்தினை பிடித்திருப்பவர்கள் செல்வராகவன், தனுஷ். தன்னுடைய கடின உழைப்பால் இந்த இடத்திற்கு வருவதென்பது சாதாரணம் கிடையாது.

இருவரும் மிகப்பெரிய சவால்களை சந்தித்து இப்படியொரு உச்சத்தை தொட்டுள்ளனர். தனுஷ் நடிப்பு, தயாரிப்பு, இயக்குனர், பாடகர் என அனைத்து அம்சங்களை கொண்டு சினிமாவில் பணியாற்றி வருகிறார்.

ஆனால் செல்வராகவன் இயக்குனராக அவதாரம் எடுப்பது என்பது எளிதல்ல. அதை ஈடு செய்திருக்கிறார் செல்வா. தன் தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தினை எடுத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தார்.

அதன்பின் 7ஜி ரெய்ன்போ காலணி படத்தினை கொடுத்து மாபெரும் வெற்றியை கண்டார். இப்படம் உண்மையில் செல்வராகவனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளனர்.

அப்படத்தில் கதிர் கதாபாத்திரம் எப்படி இருக்குமோ அதேபோல் தான் தன் வாழ்க்கையில் செல்வராகவன் பல கஷ்டங்களை சந்தித்திருக்கிறார். சினிமாவா ஒரு கட்டத்தில் அவர் உருவத்தை பார்த்து கேலி செய்து ஒதுக்கியதாகவும் சமீபத்தில் செல்வராகவன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து அவர் பதிவிடும் கருத்துக்கள் தான் வாழ்க்கையின் அனுபவமாக கருதி சமுகவலைத்தளங்களில் பதிவிடுகிறாராம்.