புகையை ஊதித்தள்ளும் தம்பி! தனுஷ் மன கஷ்டத்துக்கு செல்வராகவன் செய்த செயல்!

dhanush selvaraghavan maaran naanevaruven
By Edward Mar 25, 2022 03:50 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் தனுஷ். கடந்த மூன்று ஆண்டுகளில் 7 படங்களில் இரு வெற்றியை மட்டுமே கொடுத்துள்ளார் தனுஷ். எனைநோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ் படத்திற்கு முன் வடசென்னை, அசுரன் படத்தின் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.

இதையடுத்து, ஜகமே தந்திரம், மாறன் படத்தின் தோல்விக்கு முன் கர்ணன் படத்தினை வெற்றியை கொடுத்தார். மாறன் படத்தின் ஓடிடியில் வெளியான மாறன் படம் மோசமான விமர்சனத்தால் பெரிய தோல்வியை சந்தித்தது.

இதற்கு ஈடுகட்ட தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இடையில் மனைவியை பிரிந்து சோகத்தில் காணப்பட்ட தனுஷின் நிலையை மாற்ற அவரது அண்ணன் செல்வராகவன் ’நானே வருவேன்’ படத்தின் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

புகைப்பிடித்த படி புகையை ஊதித்தள்ளும் புகைபடத்தை பார்த்து அடுத்த ரைடுக்கு ரெடியாகும் தனுஷ் என்று கூறி உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள் ரசிகர்கள். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஆரம்பித்து கூடிய சீக்கிரம் முடியவுள்ளதாகவும் கூறப்படுகிறது.