தனுஷுக்கு வில்லனாகும் செல்வராகவன்? தம்பிக்கே டஃப் கொடுக்க அண்ணன் போட்ட மாஸ்டர் பிளான்..

Dhanush Selvaraghavan Naane Varuven
By Edward Aug 27, 2022 02:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக செல்வராகவனும், ஹாலிவுட், பாலிவு , தமிழ் நடிகராக தனுஷும் கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள். இருவரின் காம்போவும் பல ஆண்டுகளுக்கு பிறகு நானே வருவேன் படத்தில் இணைந்துள்ளது.

தனுஷுக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த குரு செல்வராகவன் என்று அவரே பலர் முறை அண்ணனை பெருமையாக சொல்லுவார் தனுஷ். அந்தவகையில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களுக்கு பிறகு தனுஷ் நடிப்பில் செல்வராகவன் நானே வருவேன் படத்தினை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் செல்வராகவன் தான் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பீஸ்ட், சாணி காகிதம் போன்ற படங்களில் நடிகராக அறிமுகமாகிய செல்வராகவன் சமீபத்தில் பகாசூரன் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

தனுஷுக்கே டஃப் கொடுக்க தற்போது செல்வராகவன் இறங்கிட்டார் என்று பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இப்படங்களுக்கு பின் தனுஷ், செல்வராகவன் கூட்டணி ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் சக்கைபோடு போட காத்திருக்கிறது.

GalleryGallery