செம்பருத்தி சீரியல் நடிகையை அசிங்கப்படுத்திய பிரபல தொலைக்காட்சி.. ஆதங்கத்தில் வெளியிட்ட பதிவு..

Serials Gossip Today
By Edward Aug 02, 2022 06:00 PM GMT
Report

பிரல தொலைக்காட்சியான் ஜீ தமிழில் பல சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. அப்படி மிகப்பெரியளவில் பிரபலமான சீரியல் செம்பருத்தி சீரியல். 2017ல் ஆரம்பித்த இந்த சீரியலில் கார்த்திக் ராஜ், சபானா, பிரியா ராமன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்தது.

இடையில் சில கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திக் ராஜ் வெளியேறி அவருக்கு பதில் மற்ற நடிகர் நடிக்க வைத்தனர். 1432 எபிசோட்டிற்கு பிறகு செம்பருத்தி சீரியல் நிறைவடைந்துள்ளது. சீரியலில் நடித்த அனைவரையும் கவுரவிக்கும் வண்ணம் ஒரு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் வில்லியாக நடித்த விஜே மெளனிகா ஆதங்கமாக ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். சீரியலில் சிறப்பான உழைப்பை கொடுத்திருக்கிறேன். ஆனல் சேனல் எனக்கான மதிப்பை கொடுக்கவில்லை.

முக்கிய ரோலில் நடித்தவர்களை மட்டுமே கண்டுகொண்டது. எனக்கான மொமெண்டோ எங்கே என்றும் என்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள் என்றும் கூறியுள்ளார். மக்கள் என்னை ஏற்றுக்கொண்டு என்னை கொண்டாடி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

Gallery