அஜித்துடன் இணைந்த இளம் சென்சேஷனல் நடிகை.. AK 64 அப்டேட்
Ajith Kumar
Sreeleela
By Kathick
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் குட் பேட் அக்லி. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AK 64 படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் தொடங்கிவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ள நட்சத்திரங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. சென்சேஷனல் இளம் நடிகை ஸ்ரீலீலா இப்படத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே வெளிவந்த தகவல்தான்.
அவரை தொடர்ந்து மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால் இப்படத்தில் நடிக்கிறார். மேலும் இயக்குநர் மிஸ்கின், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள் என தகவல் தெரிவிக்கின்றனர்.
