நடிகையுடன் கிசுகிசு!! நிம்மதியா இருக்க முடியல.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வேதனை
ஸ்டாலின் முத்து
விஜய் டிவியின் பாப்புலர் தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் சீசனில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஸ்டாலின் முத்து.
முதல் பாகமான பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹிட் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகத்திலும் ஸ்டாலின் முத்து நடித்து வருகிறார்.
நடிகர் வேதனை
இந்நிலையில் ஸ்டாலின் முத்து ஒரு விழாவில் மற்றொரு நடிகை உடன் எடுத்த போட்டோவை தவறாக சித்தரித்து சிலர் கிசுகிசு பரப்பி வருவதாக கூறி பேசிய விஷயங்கள் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில்,"தம்பதியான இவர்களுக்கு இன்று திருமண நாள்.. வாழ்த்துங்கள் என சொல்லி நானும் அந்த நடிகையும் இருக்கும் போட்டோவை பதிவிட்டு உள்ளனர்.
அதற்கு பல ஆயிரம் லைக்குகள் கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளது. எங்களை தவறாக இணைத்து பேசி வருகின்றனர்.
அதை பற்றி பலரும் எனக்கு போன் செய்து கேட்கின்றனர். அந்த நடிகையும் ஒருகட்டத்தில் போன் செய்து எனக்கும் இது போன்று போன் கால் வருகிறது.
எனக்கு குடும்பம் உள்ளது என்று வருத்தப்பட்டார். அதனால் தற்போது சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.