ச்சா இப்படியும் மனிதர்கள் உள்ளார்களா? நெகடிவ் கமெண்ட்.. கடுப்பான பிரபல ஜோடி

Sun TV Marriage Tamil TV Serials TV Program
By Bhavya Nov 01, 2024 07:30 AM GMT
Report

பிரபல ஜோடி

பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கண்மணி மனோகரன். இவர் சன் டிவி தொகுப்பாளர் அஸ்வத் என்பவரை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் அவர்களின் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள இந்த ஜோடி எப்போதும் போல தங்களின் புகைப்படத்தை நேற்று இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

ச்சா இப்படியும் மனிதர்கள் உள்ளார்களா? நெகடிவ் கமெண்ட்.. கடுப்பான பிரபல ஜோடி | Serial Actor Responds Negative Comments

அப்போது அந்த புகைப்படத்தின் கீழ் ஒரு நெட்டிசன் மிகவும் தவறான ஒரு வார்த்தையை கமெண்ட் செய்து உள்ளார். அதாவது, "இந்த இரண்டு லூசும் சீக்கிரமாக சாகணும் என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

தவறான கமெண்ட்

அதனை கண்டு ஷாக் அடைந்த அஸ்வத் மிகவும் வருத்தத்துடன் அந்த கமெண்டை ஸ்கிரீன்ஷாட் ஆக எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து அவருடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ச்சா இப்படியும் மனிதர்கள் உள்ளார்களா? நெகடிவ் கமெண்ட்.. கடுப்பான பிரபல ஜோடி | Serial Actor Responds Negative Comments

அதில், " ஒருவரை வாழ்த்த மனமில்லை என்றால் அதை கடந்து போக வேண்டி தானே, அதற்காக இப்படி ஒரு கமெண்ட் போட வேண்டுமா? சோசியல் மீடியா தற்போது மிகவும் டாக்ஸிக் ஆகிடுச்சு.

இந்த மாதிரி ஒரு மோசமான விஷயத்தை நீங்கள் கடந்து வந்துள்ளீர்களா? இது போன்ற கமெண்ட் எல்லாம் பார்க்கும் போது உண்மையில் நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா என்ற கேள்வி தோன்றுகிறது. இந்த நெகட்டிவிட்டி எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.