பிரபல சீரியல் நடிகர் யுவ்ராஜ் நேத்ரன் மரணம்!! காரணம் இதுதான்..
யுவராஜ் நேத்ரன்
குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிக்க துவங்கி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் சின்னத்திரை சீரியல் நடிகராக நடித்து பிரபலமானவர் நடிகர் யுவராஜ் நேத்ரன். தன்னுடன் சீரியலில் நடித்த நடிகை தீபாவை காதலித்து திருமணம் செய்து அஞ்சனா, அபிநயா என்ற இரு மகள்களை பெற்றெடுத்து வந்தார்.
குழந்தைகள் பிறந்தப்பின் சில ஆண்டுகள் சீரியலில் நடிப்பதை நிறுத்துவிட்டு சமீபத்தில் தான் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் நேத்ரன். தன் மகள் அபிநயாவுடன் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார்.
புற்றுநோய்
சில மாதங்களுக்கு முன் தன் தந்தைக்கு புற்றுநோய் இருப்பதாக கூறியிருந்தா மகள் அபிநயா.
அதிலிருந்து கிட்டத்தட்ட 6 மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த நடிகர் யுவராஜ் நேத்ரன், டிசம்பர் 3 ஆம் தேதி, சிகிச்சை பலனின்றி 47 வயதில் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. நடிகர் யுவ்ராஜின் மறைவு திரைத்துறை மற்றும் சித்திரை பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.