புதிய கார் வாங்கியுள்ள பிரபல கயல் சீரியல் நடிகை.. வைரலாகும் வீடியோ

Sun TV Tamil TV Serials Actress
By Bhavya Feb 04, 2025 10:30 AM GMT
Report

அபிநவ்யா

ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கி தனது திறமை மூலம் தற்போது சின்னத்திரை நாயகியாக கலக்கி வருபவர் அபிநவ்யா.

அந்த வகையில் பிரியமானவள், கண்மணி, சிவா மனசுல சக்தி, சித்திரம் பேசுதடி போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இப்போது சன் டிவியில் டாப் டிஆர்பியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் ஆனந்தி கதாபாத்திரத்தில் லீடூ ரோலில் நடித்து வருகிறார்.

இவர் சீரியல் நடிகர் தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

புதிய கார் வாங்கியுள்ள பிரபல கயல் சீரியல் நடிகை.. வைரலாகும் வீடியோ | Serial Actress Buys New Car

தற்போது சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் தொடர்ந்து புதிய வீடு, கார் வாங்கிவரும் நிலையில் நடிகை அபிநவ்யாவும் புதிய கார் வாங்கியுள்ள வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ,