லண்டனில் பிக்பாஸ் நடிகை கேப்ரில்லாவுக்கு நடந்த கொடூரம்!! வெளியான தகவல்..

Bigg Boss Serials Gabriella Charlton Tamil Actress Actress
By Edward Jul 25, 2024 01:00 PM GMT
Report

தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 3 படத்தில் தங்கை ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை கேப்ரில்லா. இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த கேப்ரில்லா, ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னாராகினார்.

அதன்பின் ஜோடி சீசன் 6 டைட்டில் வின்னராகி, பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். 102 நாட்கள் இருந்த கேப்ரில்லா 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பின் ராஜா ராணி 3 சீரியலில் நடித்தார்.

லண்டனில் பிக்பாஸ் நடிகை கேப்ரில்லாவுக்கு நடந்த கொடூரம்!! வெளியான தகவல்.. | Serial Actress Gabriella Lost Her Iphone

இதனை தொடர்ந்து ஈரமான ரோஜா 2வில் முக்கிய ரோலில் நடித்தார். தற்போது மருமகள் என்ற சீரியலில் ஆதிரையாக நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் கேப்ரில்லா, சமீபத்தில் லண்டன் சிட்டிக்கு சென்றிருக்கிறார்.

அங்கு ஒன்றரை லட்சம் மதிப்பிலான ஐ போன் 15 ப்ரோ மொபைலை தொலைத்திருக்கிறார். இதுகுறித்து டிராவல் நிறுவனம், ரயில் நிலையம் என்று பல இடங்களில் புகாரளித்து கிடைக்காமல் போனதால் கேப்ரில்லா கொஞ்சம் சோகத்தில் இருந்துள்ளார்.