குட்டி ஆடை அணிந்த ஷாருக்கின் மகள்.. அப்பாவின் கேள்வியால் கடும் கோபம்!
ஷாருக்கான்
பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய மூன்று திரைப்படங்கள் ஒரே ஆண்டில் வெளிவந்தது. அடுத்ததாக தனது மகளுடன் இணைந்து ஷாருக்கான் நடிக்கவுள்ளார்.

கடும் கோபம்!
இந்நிலையில், ஷாருக்கான் மற்றும் அவரது மகள் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.
அதாவது, ஒருநாள் ஷாருக்கான் மகள் சுஹானா கான் மிகவும் குறைந்த ஆடை அணிந்து வீட்டை விட்டு வெளியே கிளம்பினார். அதைப் பார்த்த ஷாருக்கான், 'மகளே, ஏன் இவ்வளவு குறைந்த ஆடை அணிந்து வெளியே செல்கிறாய்?' என்றார்.

இதைக் கேட்டு சுஹானாவிற்கு கடும் கோபம் வந்தது. சுஹானா கான் கடும் கோபத்துடன் தந்தை ஷாருக்கிடம், அப்பா ஆர்யன் கானும் குறைந்த ஆடை அணிந்து எல்லா இடங்களுக்கும் செல்கிறான்.
அவனும் பார்ட்டிக்கு போகிறான். ஆனால் நீங்கள் அவனை எதுவும் சொல்வதில்லை. எனக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு? என் மீது மட்டும் ஏன் இவ்வளவு கவனம், எச்சரிக்கை? எனக் கேட்டார்.
அதற்கு ஷாருக்கான் கூலாக தங்கத்தை பத்திரமாக பெட்டகத்தில் வைப்பார்கள். ஏனெனில் அது மிகவும் விலை உயர்ந்தது' என்றாராம். இந்த தகவலில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்று தெரியவில்லை.