ஒரு நாளை ரூ. 750 தான் தந்தாங்க!! சம்பளத்தை ஓபனாக சொன்ன சீரியல் நடிகை கிருத்திகா..
கிருத்திகா அண்ணாமலை
சின்னத்திரை சீரியல்களில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று மெட்டிஒலி. இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடித்தவர் நடிகை கிருத்திகா அண்ணாமலை. வில்லி ரோலில் கலக்கி வந்த கிருத்திகா, தற்போது கார்த்திகை தீபம், மல்லி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.
திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில், விவாகரத்தானது. அப்போது குழந்தை பிறந்த 2 மாதத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அதன்பின் என் பெயர் உமா மகேஷ்வரி என்று தான் வெளியில் தெரியும் என்பதால் நான் தற்கொலைக்கு செய்ததாக உமா மகேஷ்வரி என்று தான் செய்திகள் வெளியானது.
அப்படி இருக்கும்போது உனக்கு என்னம்மா, விவாகரத்து என்பதெல்லாம் சாதாரணம் என்று சொல்லுவாங்க, திரும்பவும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன், அதற்கு விரும்பவும் இல்லை, பண்ணவும் மாட்டேன் என்று எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.
ஒரு நாளை ரூ. 750
அதன்பின் பேசிய கிருத்திகா, மெட்டிஒலி சீரியலில் ஒரு நாளை ரூ. 750 சம்பளம் வாங்கினேன். அதன்பின் ஏவிஎம் நிறுவனத்தின் சீரியலில் ரூ. 500 சம்பளம் கொடுப்பாங்க.
இப்போது நடிக்கும் சீரியல்களில், மல்லி சீரியலுக்கு 10 ஆயிரம் ரூபாயும், கார்த்திகை தீபம் சீரியலுக்கு 12 ஆயிரம் ரூபாயும் ஒரு நாளை சம்பளமாக வாங்குகிறேன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் கிருத்திகா அண்ணாமலை.