அந்த விஷயத்துக்கு காதலன் சம்மதிக்கவில்லை... Breakup செய்தேன், சீரியல் நடிகை
சீரியல் நடிகை
பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்த சீரியலில் முல்லை கதாபாத்திரம் ஹைலைட்டாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது, காரணம் சித்ரா நடிப்பு தான்.
ஆனால் அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள அவருக்கு பதில் காவ்யா முல்லையாக நடித்து வந்தார்.
அவரும் சில காரணங்களால் வெளியேற கடைசியாக லாவண்யா முல்லையாக நடித்தார்.
இவர் ஒரு பேட்டியில், நான் பெற்றோர்களுக்கு தெரியாமல் மாடலிங் செய்து விளம்பரம் நடிக்க ஆரம்பித்தேன், விஷயம் தெரிந்ததும் பெற்றோர்கள் சண்டை போட்டார்கள், ஆனால் கடைசியில் எனக்கு சம்மதம் சொன்னார்கள்.
வங்கியில் பணிபுரிந்தபோது நான் செய்த எல்லா விஷயத்திற்கும் ஓகே சொன்ன எனது காதலன் மாடலிங் துறைக்கு வந்ததும் நான் செய்வது தவறு என்றார். இது எனது கனவு, என் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போக கூடிய வாய்ப்பு.
அதை விட சொன்னதால் நான் எனது காதலனை Break Up செய்தேன் என கூறியுள்ளார்.