சூரிய ஒளியால் மின்னும் சீரியல் நடிகை மகாலட்சுமி!! வியந்துபோகும் ரசிகர்கள்...
நடிகை மகாலட்சுமி
சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை மகாலட்சுமி. கடந்த 2022 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து ஆண் குழந்தை பெற்ற மகாலட்சுமி கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார். மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த ரவீந்தரை இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார் மகாலட்சுமி.
இத்திருமணத்தை பலரும் விமர்சித்த நிலையில் ரவீந்தருடன் மகாலட்சுமி சிறப்பாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கு ரவீந்தர் சென்று சில நாட்களில் வெளியேறினார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மகாலட்சுமி, சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது சூரிய ஒளியில் மின்னும் அழகில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார் மகாலட்சுமி.