விவாகரத்தாகி 3 வருடம் ஆச்சு.. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை

Pregnancy Viral Photos Tamil TV Serials Actress
By Bhavya Nov 07, 2024 05:30 AM GMT
Report

சீரியல் நடிகை 

துணை கதாபாத்திரத்தில் நடித்து பின் சீரியலில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை நிவேதிதா பங்கஜ். இவர் ராதிகா சரத்குமார் இயக்கத்தில் வெளியான வாணி ராணி சீரியலில் நடித்து அதன் மூலம் பிரபலமானவர்.

பின் கல்யாண பரிசு, மகராசி, திருமகள், சுந்தரி என பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் மகராசி சீரியலில் நடித்து கொண்டிருந்த போது தன்னுடன் நடித்த நடிகர் ஆரியனை காதலித்து கடந்த 2019 - ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

விவாகரத்தாகி 3 வருடம் ஆச்சு.. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை | Serial Actress Pregnant Photos

திருமணத்திற்கு பின் சீரியல் நடிப்பதில் இருந்து விலகி இருந்த நிவேதிதா திடீரென சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் நடிக்க தொடங்கினார். கதாநாயகி கதாபாத்திரம் கிடைக்காமல் வில்லி , குணசித்திர கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

நிறைமாத கர்ப்பம்

இந்நிலையில், மகராசி சீரியலில் கதாநாயகனாக நடித்த சுரேந்தருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்கில் தள்ளிவிட்டார்.

விவாகரத்தாகி 3 வருடம் ஆச்சு.. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை | Serial Actress Pregnant Photos

அப்போது தன் முதல் கணவருடன் மூன்று ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து ஆனதாகவும் தற்போது சுரேந்தரை காதலிப்பதாகவும் தெரிவித்தார். இந்த ஜோடி கடந்த பிப்ரவரி மாதம் தடபுடலாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி ஒன்பது மாதமே ஆனநிலையில், நிவேதிதா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளம் மூலம் வெளியிட்டு தெரிவித்திருந்தார்.