பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு அடித்த லக்.. யார் படத்தில் நடித்துள்ளார் பாருங்க
நடிகை ரோஷினி
விஜய் டிவியில் ஒளிபரப்பான வெற்றிகரமான தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.
பிரவீன் பென்னட் இயக்க அருண் மற்றும் ரோஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர், பின் ரோஷினி பாதியிலேயே தொடரில் இருந்து வெளியேற வினுஷா நடிக்க தொடங்கினார்.
ரோஷினி சீரியலில் இருந்து வெளியேறிய பின் நிறைய போட்டோ ஷுட் நடத்துவது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெறுவது என கலக்கி வந்தார். புதிய படம் இந்த நிலையில் நடிகை ரோஷினி கமிட்டாகியுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது விஜய் சேதுபதி, பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார், இதில் நாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, செம்பன் வினோத், ஜோஸ், ரோஷினி ஹரிப்பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்களாம்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தார்கள். ரோஷினி புதிய படம் நடித்துள்ள செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.