அட்ஜஸ்ட்மென்ட்டில் நிறைய அனுபவம் இருக்கிறது!..16 வயதில் விஜய் டிவி சீரியல் நடிகை சந்தித்த சோகம்
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான 'தாரி' என்ற சீரியல் மூலம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீநிதி. இவர் விஜய் டிவியில் செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
தற்போது ஸ்ரீநிதி 'தெய்வம் தந்த பூவே' என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ரீநிதி சினிமாவில் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர், அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து எனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது.
நான் 10 வகுப்பு படித்து வந்த போது ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது பட தரப்பில் இருந்து எனக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.
அதுக்கு நான் நோ சொல்லிவிட்டேன். ஆனால் அவர்கள், நீங்க வரலான பரவால அம்மா வந்த கூட ஓகே தான் என்று சொன்னாங்க. இதை கேட்டவுடன் அம்மா மிகவும் சோகமடைந்தார் என்று ஸ்ரீநிதி கூறியுள்ளார்.