புதிய தொழிலை தொடங்கிய பிரபல சீரியல் நடிகை வைஷ்ணவி...
Tamil TV Serials
By Yathrika
வைஷ்ணவி
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி, பொன்னி போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றவர் தான் நடிகை வைஷ்ணவி.
இவர் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் வெற்றி வசந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆவதற்குள் வைஷ்ணவியின் தந்தை உயிரிழந்துவிட்டார்.

தனது அப்பா இறப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்துள்ள வைஷ்ணவி தற்போது புதிய தொழிலை தொடங்கியுள்ளார். புதிய ஆடை தொழிலை தொடங்கியுள்ளார். விஷயம் தெரிந்ததும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
