அட்ஜெஸ்ட்மெண்ட் எல்லா இடத்திலும் இருக்கு!! ஓப்பனாக பேசிய பிரியா பவானி சங்கர்
செய்தி வாசிப்பாளராக பிரபலமாகி சின்னத்திரையில் கல்யாண முதல் காதல் வரை சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
இதன்பின் வெள்ளித்திரையில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது லீட் ரோலில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், பாலியல் தொல்லை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
சினிமாத்துறையில் மட்டும் அல்ல எல்லா துறையிலும் பாலியல் தொல்லை இருக்கிறது என்றும் அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு ஆளாகியவர்கள் தைரியமாக பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், முக்கியமானது அவர்கள் சொல்வதை சமுகம் கேட்டு, பாதிக்கப்பட்டவர்களை குறை சொல்வதை நிறுத்த வேண்டும்.
நீ ஏன் இதை முன்பே சொல்லவில்லை என்றும் இப்போ ஏன் சொல்கிறாய் என்றும் கேட்கக்கூடாது, அதை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அந்த பிரச்சனையை பற்றி கண்டுகொள்ளாமல் ஒரு பெண் எந்த துறையில் வேலை செய்கிறார் என்ன மாதிரியான வேலை பார்க்கிறார் என்ற பாகுபாடு பார்க்காமல் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்.
அவர்கள் சொலவதை கேட்டு ஆதரவு அளிக்க வேண்டுமே தவிர குறை சொல்வதை நிறுத்த வேண்டும் என்று பிரியா பவானி சங்கர் ஒப்பனாக கூறியிருக்கிறார்.