எனக்கு உடல்ரீதியாக தொல்லை கொடுத்தார்கள்! சீரியல் பக்கம் வந்த நடிகை சோனா ஓப்பன்..

sona abi tailors sexual-harassments
By Edward Jun 03, 2021 02:50 PM GMT
Report

தமிழ் சினிமாவில் க்ளாமருக்கு என்றே ஒருசில நடிகைகளின் பெயர் இருக்கும். அதுபோல அந்தமாதிரி காட்சிகளில் இவர் ஓகே என்று கூறும் அளவிற்கு நடிக்க ஒப்புக்கொள்ளும் நடிகைகளும் இருக்கிறார்கள்.

அப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என க்ளாமர் குயினாக கலம் கண்டவர் நடிகை சோனா. தமிழில் ஓரளவிற்கு வெற்றிபெற்ற படங்களில் நடித்து வந்த சோனா படவாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை என்று சினிமாவை விட்டு வெளியேறி யுனிக் என்ற பேஷன் கடை வைத்திருக்கிறார்.

தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ள சோனா அபி டெய்லர்ஸ் என்ற சீரியலில் நடித்து வருகிறாராம். இதையடுத்து, சினிமாவில் தனக்கு நடந்த கசப்பான தருணத்தை கூறியுள்ளார். உடல் ரீதியாக எனக்கு பாலியல் தொல்லை நடந்ததாகவும், நமக்கு உரிமை கிடைக்க நாம்தான் போராடவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உங்களுக்கு எதாவது நடந்தால் அதை வெளிப்படுத்தி உரிமைக்கு குரல் கொடுங்கள். எதுவும் நடக்கவில்லை எனில் அதை கடந்து செல்லுங்கள் நான் அதிலிருந்து கடந்து வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார் சோனா.