7300 கோடி சொத்து!! ஷாருக்கானின் சம்பளமே இத்தனை கோடியாமே..
300 கோடி சம்பளம்
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்தவர் நடிகர் அல்லு அர்ஜுன். புஷ்பா 2 படத்திற்காக 300 கோடி சம்பளமாக வாங்கிருக்கிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால் அல்லு அர்ஜுனை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ஷாருக்கான் தானாம்.
அதாவது பதான் படத்திற்கு சுமார் 350 கோடி சம்பளமாக ஷாருக்கான் வாங்கியதாகவும் இதற்கு முன் நடித்த படம் தோல்வி அடைந்ததால் பதான் படத்தில் சம்பளமே வாங்காமல் லாபத்தில் இருந்து பங்கு தரவேண்டும் என்ற ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.
7300 கோடி சொத்து
அப்படி பதான் படம் ரிலீஸாகி 1000 கோடிக்கும் மேல் வசூலித்ததால் லாபத்தில் 55 சதவீதம் அதாவது 350 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது.
அதேபோல் அட்லீ இயக்கத்தில் வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூலித்த ஜவான் படத்தை ஷாருக்கான் தயாரித்து மிகப்பெரிய லாபத்தை பார்த்திருக்கிறார். அப்படி சம்பாதித்து 7300 கோடி சொத்தினை சேர்த்து வைத்திருக்கிறாராம் ஷாருக்கான்.