ரூ. 7300 கோடி சொத்து மதிப்பு!! ஷாருக்கான் மேனேஜர் பூஜா தட்லானியின் சொத்து மதிப்பு இவ்வளவா?
ஷாருக்கான்
முன்னணி பாலிவுட் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஷாருக்கான் தன்னுடைய மும்பை மன்னட்டில் இருக்கும் பிரம்மாண்ட வீட்டின் வேலைப்பாடுகள் இருக்கிறது என்பதால் அந்த வீட்டை காலி செய்கிறார்.
மே மாதம் முதல் மராமத்து பணிகள் துவங்க இருப்பதால் பாந்த்ரா பகுதியில் இருக்கும் புதிய அபார்ட்மெண்ட் ஒன்றுக்கு 24 லட்சம் ரூபாய் மாத வாடகைக்கு எடுத்து அங்கு குடிபெயவுள்ளார்.
அப்பார்ட்மெண்ட்டில் 4 தளங்களை வாடகைக்கு எடுத்து தன் குடும்பம் மற்றும் பணியாட்கள், பாதுகாப்பு நிர்வாகிகள் உட்பட தங்கும் வசதியை ஒதுக்கி இருக்கிறாராம் ஷாருக்கான்.
பூஜா தட்லானி
இந்நிலையில் ஷாருக்கானுடன் கடந்த 2012ல் இருந்து மேனேஜராக பணியாற்றி வருகிறார் பூஜா தட்லானி. அவர், ஷாருக்கானின் சினிமா, ஐபிஎல் அணியான கல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தொழில், தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட பலவற்றை பார்த்து வருகிறார்.
அப்படி ஷாருக்கானின் பல விஷயங்களை பார்த்து வரும் பூஜா தட்லானிக்கு ஆண்டு சம்பளமாக 7 முதல் 9 கோடி ரூபாய் வரை வாங்கி வருகிறாராம். 2021ன் படி பூஜா தட்லானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 45 கோடி முதல் ரூ. 50 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.