6000 கோடி சொத்து!! கார் EMI கட்டக்கூட முடியாத நிலையில் ஷாருக்கான்.. உண்மையை கூறிய பிரபல நடிகை

Shah Rukh Khan Actors Bollywood Jawan
By Edward Jul 04, 2024 03:30 PM GMT
Edward

Edward

Report

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் ஹீரோக்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இந்திய சினிமாவில் பணக்கார நடிகராக திகழ்ந்து வரும் ஷாருக்கானின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 6300 கோடி. கடந்த ஆண்டு பதான், ஜவான் என்ற இரு படங்களும் 1000 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது.

6000 கோடி சொத்து!! கார் EMI கட்டக்கூட முடியாத நிலையில் ஷாருக்கான்.. உண்மையை கூறிய பிரபல நடிகை | Shahrukh Khan Not Able To Pay Emi For His Car

இப்படி கோடிகளில் புறண்டு வரும் ஷாருக்கான் ஒரு காலத்தில் கார் EMI கூட கட்டமுடியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறாராம். ஷாருக்கானின் தோழியும் அவருடன் நடித்த நடிகையுமான ஜூகி சாவ்லா அளித்த பேட்டியொன்றில் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அப்போது ஷாருக்கானிடம் ஒரு கர்ப்பு ஜிப்சி இருந்தது.

என்னுடன் ராஜுபன் கயா ஜெண்டில்மேன், தி ஆசனா போன்ற படத்திலும் நடிகை திவ்யபாரதியுடன் மற்றொரு படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். 24 மணி நேரமும் உழைத்து கடின உழைப்பாளியாக இருந்தார் ஷாருக். சில காரணத்தினால் அவரால் காரின் EMI செலுத்த முடியாமல் போயுள்ளது.

6000 கோடி சொத்து!! கார் EMI கட்டக்கூட முடியாத நிலையில் ஷாருக்கான்.. உண்மையை கூறிய பிரபல நடிகை | Shahrukh Khan Not Able To Pay Emi For His Car

அப்போது வங்கியில் இருந்து வந்த அதிகாரிகல் காரை ஜப்தி செய்தனர். இதனால் மனமுடைந்த ஷாருக், ஷூட்டிங்கிற்கு சோகமாக வந்தார். ஏன் வருந்துகிறீர்கள், எதிர்காலத்தில் ஒன்றல்ல பல கார்களுக்கு சொந்தக்காரராகுவீர்கள் என்று சொல்லி நான் ஆறுதல் படுத்தினேன் என்று ஜூகி சாவ்லா தெரிவித்துள்ளார்.

அப்படி அவர் சொன்னபடி பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரராக மாறி பல கார்களை வாங்கும் வசதி கொண்டவராக மாறியிருக்கிறார் நடிகர் ஷாருக்கான்.

Gallery