அண்ணன் தம்பியை நம்பி மகளை அறிமுகப்படுத்திய சங்கர்! இந்த நடிகரின் செயலால் தாமதமாகும் வருங்கால சினிமா..

suriya karthik shankar prakashraj aditishankar
By Edward Sep 30, 2021 07:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயரை பெற்றவர் இயக்குநர் சங்கர். சமீபத்தில் நடிகர் ராம் சரண், கியாரா அத்வானி நடிக்கவிருக்கும் படத்தில் பிஸியா இருந்து வருகிறார். லாக்டவுன் சமயத்தில் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமணத்தை முடித்த இடையில் பல பிரச்சனைகளை சந்தித்தார். அதையடுத்து மீண்டு வந்த சங்கர் தற்போது இளைய மகள் அதிதி சங்கரை நடிகையாக அறிமுகப்படுத்த திட்டமிட்டார்.

அதேபோல், நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகும் விருமன் படத்தில் அறிமுகப்படுத்தினா. நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் அறிமுகமாகும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும் படத்தின் பூஜையும் பல முன்னணி பிரபலங்கள் முன்னிலையில் நடந்தது. படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் கார்த்தி மற்றும் முத்தையா கூட்டணியில் உருவான கொம்பன் திரைப்படம் கார்த்திக்கு பெரிய அளவில் வெற்றியை பெற்றுக் கொடுத்ததால் இப்படமும் பெரிய அளவில் வெற்றி பெறும் என கூறி வருகின்றனர். படக்குழுவினர் தற்போது தேனி மாவட்டத்திற்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் ஆனால் படக்குழுவினர் சென்னை திரும்பிய தகவல் வெளியானது. அதற்கு காரணம் இப்படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஆனால் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால் தற்போது கால்ஷீட் கொடுக்க முடியாமல் உள்ளனர்.

தற்போது படக்குழுவினர் அவரின் தாமதத்தால் தேனியில் இருந்து சென்னைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. தீபாவளி நெருங்குவதால் கண்டிப்பாக ஒரு 15 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடியாது என கூறியிருந்தனர். தற்போது பிரகாஷ்ராஜும் படப்பிடிப்பு தள்ளிப் போனதால் சூர்யா மற்றும் கார்த்தி குழப்பத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரகாஷ்ராஜை தூக்கிட்டு வேறொரு நடிகரை போட்டாலும் சூர்யா, கார்த்தி மற்றும் பிரகாஷ்ராஜ் மூவருக்கும் இருக்கும் நட்புக்குள் விரிசல் ஏற்படும் என்பதால் சூர்யா தயாரிப்புச் செலவு அதிகமானாலும் பரவாயில்லை விட்டுவிடுங்கள் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.