வாட்டர் மெலன் ஸ்டார் திவாகருக்கு செக் வைத்த நடிகை ஷகிலா!! பகீர் புகார்..
நடிகை ஷகிலா
வாட்டர் மெலன் ஸ்டார் என்று தன்னை சமூகவலைத்தளத்தில் பேசி வரும் திவாகர் மீது நடிகை ஷகிலா, சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டையே உலுக்கிய ஐ.டி ஊழியர் கவின் ஆணவக் கொலையை நியாப்படுத்தும் விதமாக யூடியூப் பிரபலம் திவாகர், அண்மைக்காலமாக தன் சார்ந்த சமூகத்தை உயர்த்தியும் பிற சமூகத்தை தாழ்த்தியும் சாதி ரீதியாக பேசி வருகிறார். அவர் பேசியது தன்னை கடுமையாக பாதித்தது.
வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்
ஜி பி முத்து என்பவரையும் சாதி ரீதியாக குறிப்பிட்டு பொதுவெளியில் பேசி வருகிறார். இதனால் அவர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளதாக புகாரளித்தப்பின் ஷகீலா செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக பேசுபவர்களுக்கு எதிராக ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் எதிர் காலத்தில் திவாகர் போன்ற நபர்கள், நாம் பேசுவது சரிதான் என்று நினைத்துக் கொண்டு சாதிய மோதலை தூண்டுவிடக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.
சாதிய ரீதியில் பேசுபவர்களுக்கு தொடக்கத்தில் இருந்து
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஷகீலா
தெரிவித்துள்ளார்.