விஜய் திரிஷா உறவு இதுதான்.. அவங்கமட்டும் ஒழுங்கா? நடிகை ஷகீலா கொந்தளிப்பு...
நடிகர் விஜய், மனைவி சங்கீதாவின் விவாகரத்து மனு தாக்கல் செய்த சில நாட்களிலேயே நடிகை திரிஷாவுடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டது பேசுபொருளானது. இந்த விவகாரம் குறித்து பலரும் விமர்சித்து பேசி வந்த நிலையில், நடிகை திரிஷா இதுகுறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

நடிகை ஷகீலா
அதில், விஜய் ஏன் தான் அரசியலுக்கு வந்தாருன்னே தெரியல. அவர் அரசியலுக்கு வந்தப்பின் அவரை பற்றி என்ன என்னலாமோ பேசுறாங்க. அதுவும் நடிகை திரிஷா கூட அவர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தது பற்றி தப்புத்தப்பாக பேசுறதை பார்க்கும்போதே கடுப்பாக இருக்கிறது. ஒரு ஆண், ஒரு பெண் நல்ல நண்பர்களாக இருக்கக்கூடாதா? ஏன் ஒரு சாதாரண நட்பைக்கூட சந்தேகத்துடன் பார்க்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் ஷகீலா.

பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக வருவது, ஒரே மாதிரியான ஆடையணிவது போன்ற விஷயங்களை வைத்து தேவையற்ற கதையை உருவாக்குவது சரியில்லை. இந்த விமர்சனங்கள் தனிப்பட்ட எல்லைகளை மீறி நடிகர்களின் தனியுரிமை பாதிக்கப்படுகிறது. ஒரு நடிகரின் வாழ்க்கை, அவரது சொந்த விஷயம். அதை வைத்து அவரின் பொது வாழ்க்கையையும் சமூகப்பணியையும் மதிப்பிடுவது தவறு.
விஜய் அரசியலுக்கு வந்ததால் எல்லோரும் வாரை விமர்சிக்கிறார்கள், ஆனால் அவருடைய அரசியலை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுறாங்க. அவரைப்பற்றி பேசுறவங்களிடம் நான் கேள்வி கேட்கிறேன், அவங்களோட வாழ்க்கை மட்டும் ரொம்ப ஒழுங்கா இருக்கா? அவங்க எப்படி எல்லாம் வாழ்ந்துட்டு இருக்காங்கன்னு அவங்களுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும், ஆனா அடுத்தவங்கள பற்றி மட்டும் குறை சொல்ல வந்துடுறாங்க என்று ஷகீலா கொந்தளித்துள்ளார்.