இளையராஜாவுக்கு வேலை வெட்டி இல்ல..மரியாதை கெடுத்துக்கிட்டாரு!! பிரபல நடிகை..
மிஸஸ் அண்ட் மிஸ்டர்
நடிகை வனிதா, ராபர்ட் மாஸ்டர் நடித்து வெளியாகியுள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் தன்னுடைய இசையில் வெளியான பாடலை பயன்பட்டது குறித்து இளையராஜா வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதனால் கடும் வேதனையில் வனிதா புலம்பி வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நடிகை ஷகீலா, இளையராஜா குறித்து ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில், இளையராஜாவுக்கு இப்போது வேலை வெட்டி இல்லை, எத்தனை படங்களுக்கு இசையமைக்கிறார் என்று தெரியவில்லை.
உண்மையில் இந்த விஷயத்தை கேட்டு எனக்கு கோவம் தான் வருகிறது. அது அவர் இசையமைத்த பாடல்தான், நான் குழந்தையாக இருந்ததில் இருந்து அவரின் பாடலை கேட்டு வளர்ந்து வருகிறேன்.
இளையராஜாவுக்கு வேலை வெட்டி இல்ல
இளையராஜா சார், லிவ்விங் லெஜண்ட்டாக இருக்கிறார். அவரை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இவரை மக்கள் மிகப்பெரிய உயரத்தில் வைத்து இருக்கிறார்கள். ஆனால், அவர் பாட்டை பயன்படுத்துவதால் வழக்கு போடுவது சரியில்லை. அவர் ஒரு படத்திற்கு இசையமைத்துவிட்டு, அதற்கான பணத்தை வாங்கிவிட்டார்.
அப்படி என்றால் அது தயாரிப்பு நிறுவனத்திற்கு தான் சொந்தம். அவர் எப்படி அந்த பாட்டு என்னுடையது என்று உரிமை கொண்டாட முடியும். அவருக்கு படமில்லை, வேலை வெட்டி இல்லை என்பதால், இதுபோன்ற வேலைகளை செய்து வருகிறார்.
யாராவது அவருக்கு வேலை கொடுத்தால் அதில் கவனம் செலுத்துவார். அவருக்கென்று தனி மரியாதை இருக்கும் போது இந்த வயதில் அவரின் மரியாதையை அவரே கெடுத்துக்கொள்கிறார் என்று காட்டமாக பேசியிருக்கிறார் நடிகைன் ஷகீலா.