தன் படத்தை தானே தயாரிக்க போகும் நடிகை ஷகிலா! இந்த ரஜினி பட நடிகையா?
shakeela
humaqureshi
By Jai
மலையாள சினிமாவில் க்ளாமர் குயினாக 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஷகிலா. தன் குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டத்தால் இந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆரம்பித்த ஷகிலா தமிழ், மலையாள உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
சில காலங்கள் படவாய்ப்பில்லாமல் இருந்த ஷகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து தன் இடத்தினை மீண்டும் பிடித்த ஷகிலா, தன் வாழ்க்கை வரலாறு படத்தின் கதை உருவாக்கியுள்ளதாகவும் தானே தயாரிக்க முடிவெடுத்துள்ளார்.
அப்படத்தில் ஷகிலாவாக நடிக்க பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஷகிலா என்ற படம் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.